Friday, July 31, 2009

நான் காப்பியை நிறுத்திய கதை

என் நண்பன் ஒருவன் வீட்டில் கிரகப்ரவேசம்...
காலை எனக்கு சில வேலைகள் இருந்ததால்... மதியம் ஒரு 2 மணி அளவில்
அவன் வீட்டைத் தேடி கண்டு பிடித்து சென்றேன்...
அவன் வீடு....
நடுகாட்டில்.. நட்டநடுவில்...1 ground நிலம்....
அவன் வீட்டை கண்டுபிடிக்க கஷ்படவே இல்லை...ஏன் என்றால்..
அங்கு இருந்தது அவன் வீடு மட்டும் தன்...

நான் போய் சேர்ந்த பொது மணி 2:15.. எனக்கு பயங்கர பசி...
அடடா சுரேஷ்.. இப்ப வந்து இருக்கீங்க... சாப்பாடு எல்லாம் முடிந்து விட்டதே.... என்று
உண்மையான வருத்தத்துடன் சொன்னார் நண்பர்...
பரவா இல்லை சார், என்றேன்.. அடி வயறு எரிந்து கொண்டே...
சேரி.. காபியாவது குடிக்கறீங்களா - இது அவர்...
ஆஹா.. காபியாவது கிடைக்குதே என்ற எண்ணத்தில்.. சரி என்று தலையாட்ட எத்தனிதேன்..
கடவுளே... எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?
என் நண்பரின் 5 வயது மகன் அங்கே வந்து..
"அப்பா எந்த மடையனாவது 2 மணிக்கு காபி குடிப்பானான்னு" என்றான்

முடிந்தது..

நான் மடையன் இல்லை என்று நிரூபிக்க.... பசியோடு திரும்பினேன்.....
அன்று முதல் இன்று வரை... நான் 2 PM முதல் 5 PM வரை காபி குடிப்பது இல்லை....

2 comments:

Unknown said...

nalla comedy!

Unknown said...

Sir, Yenga veetla adutha maasam Girahapravesam, kandipaa vandirunga...