Thursday, July 23, 2009

லோன் வேணுமா சார்??

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்...

பாடல் ஒலிக்கிறது. சட்டை பையிலிருந்து mobilei எடுத்து ஹலோ என்றேன்

Good morning சார். நாங்க XXXX bankil இருந்து பேசறோம். Personal loan ஏதாவது வேணுமா?? - இது அவள்
சொல்லுங்க. லோன் எடுக்கலாம்னு தான் இருக்கேன் - இது நான் (அப்ப எடுத்த லோஅனை எல்லாம் எப்படா புன்ணாக்கு அடைப்ப என்று மனைவி கேட்பது கேட்கிறது)
உங்க கம்பெனி பேர் என்ன சார் ? - இது அவள்
XXXTechnologies, வழக்கம் போல் அவள் தப்பாக நோட் செய்து கொள்ள... இல்லைமா "A for Apple B for Boy என்று பால பாடம் எடுத்தேன்
Take home sal net எவ்வளவு சார் ?
யாரிடமும் சொல்லாது உண்மையை அவளிடம் சொன்னேன். (HR rule is confidential)
Ok sir...information check பண்ணிட்டு 2 minutesla call பண்றேன்னு சொல்லிட்டு வைத்து விட்டாள்...
போகட்டும்......

2 நிமிடங்கள் கழித்து...

மீண்டும் கண்கள் இரண்டால்......

Sir... உங்க company Listed இல்லை ஆனாலும் நீங்க 50K மேல சம்பளம் வாங்குவதால் 24% வரை பண்ணலாம் - எனக்காக பரிந்து பேசுவது போல் பேசினாள்...
Intrest ரொம்ப அதிகம்மா, லோன் வேண்டம் என்றேன்..

இல்லை sir, உங்க கம்பெனி listed இல்லை.. மீண்டும் அதே பல்லவி...

ஒரு காலத்தில் listed(Black) இல்லை என்றால் சந்தோஷம்.. இப்போது அது பிரச்சனை...
Sorry ma.. உங்க criteriavirkaaga நான் எங்க கம்பெனி சேர்மன் கிட்ட போய் பேச முடியாது என்று சொல்லி கொண்டே...
சரி என் நண்பண் ஒருவன் "உண்மை" கம்பெனியில் வேலை செய்கிறான்... above 50K sal... அவனுக்கு எத்தனை % intrestla பண்ண முடியும் என்றேன்
உண்மை கம்பெனி என்றால் 18-20% sir என்றாள்....

அட பாவிங்களா.. ஒழுங்கா சம்பளம் கொடுக்கும் கம்பெனி listed இல்லை.... யார் acquire பண்ணுவாங்களோனு இருந்த கம்பனிக்கு கம்மி intrest....
தலையில் அடித்து கொண்டே போனை கட் செய்தேன்....
நானாக லோன் வேண்டும் என்று கேட்கவில்லை. அவர்களாக கூப்பிட்டு என் தகவல்களை பெற்று உனக்கு ௨0% லோன் வாங்க தகுதி இல்லை என்று சொல்வது -- ம்ம்ம் என்ன ஒரு வில்லத்தனம்

Note: இறுதிவ்ரை, அந்த பெண்ணிற்கு என் பேரும் எனக்கு அந்த பெண் பேரும் தெரியாது.... Unwanted details are not seeked - இது தான் டைம் managementO??

No comments: