Wednesday, July 22, 2009

எனது ஆசான்????

பதிவுகளை படிப்பதை மட்டுமே தொழிலா கொண்ட என்னை பதிவேற்றம் செய்யதூண்டிய அதனை பதிவுவுலக ஜாம்பவான்களுக்கும் என் நன்றி. நீங்கள் இருக்கும்தைரியத்தில் பதிவு எழுத தொடங்கி விட்டேன்.
எண்ணங்கள்பல நூறு இருந்தாலும் எழுதும் போது the framework of பிளாக்கர்என்பது தெரியாமல் தவிக்கிறேன். யாரவது ஹெல்ப் பண்ண முடியுமா???
என் கேள்விகள் கீழே

  1. நான் படித்த பெருவாரியான ப்ளொக்ஸ் திரு. சாரு அவர்களையும் திரு. ஜெயமோகன் அவர்களையும் சார்ந்ததாகவே உள்ளது. இலக்கியம் பற்றி பதிவுஏற்ற, இவ்விருவர்களில் ஒருவரின் சார்பு இருத்தல் வேண்டுமா???
  2. அந்தரங்க விஷயங்களை அப்பட்டமாக நான் சொன்னால் தன் என்னைஇலக்கிய வாதி என்று ஏற்று கொள்வார்களா ?
  3. பெரும்பாலும் Blog என்பது ஒருவரின் என்ன ஓட்டம் என்றால், ஒருவரின்எண்ணம் தவறு என்று வன்சொற்கள் சொல்வது அபத்தம் இல்லையா ?
  4. பின்னோட்டம் என்பது ஒரு ஓட்டம் எனில், எப்போது அது முடியும்?
  5. யாரையாவது குறிப்பிட்டு தாக்க வேண்டும் என்றால் pulambalonline.com, pulambal.in போன்று தனியாக சைட் ரேகிச்டேர் செய்து கொள்ள வேண்டுமா?

யாரவது என் அறிவு கண்ணை திறந்து வைத்தால் வாழ்நாள் முழுதும் அவர்கள்பதிவிற்கு பின்னோட்டம் இடுகிறேன்.

ஆவலுடன்
Suresh

2 comments:

ரவி said...

அப்படி எல்லாம் இல்லை.

நீங்க நெனைக்கிறதை எழுதுங்க.

அவ்ளோதான்..

கிருஷ்ண மூர்த்தி S said...

நீங்க இவ்வளவு அப்பாவியா?

சாரு-ஜெமோ இருவருக்கும் இடையே நடக்கும் இலக்கியத்தரமான சண்டையைப் பற்றி, நீங்கள் எந்தவொரு சார்பு நிலையம் எடுக்க வேண்டாம், ஆனால் 'அடி, வெட்டு, குத்து' என்று ஊக்கப்படுத்த நிறைய சவுண்ட் விட வேண்டும். இல்லையென்றால் உங்களை, முன்-பின் நவீனத்துவம் எதிலும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்!

அடுத்து, அது பின்னூட்டம்! பின் ஓட்டம் அல்ல! பின்னூட்டம் என்பது கிட்டத் தட்ட, நீ என் முதுகை சொறி-நான் உன் முதுகைச் சொரிகிறேன் என்ற ரேஞ்சில் தான் இருக்கும். சொரியச் சொரியத் தான், பிரபல பதிவராக முடியும்! வன்சொல்லோ,புண் சொல்லோ, நன் சொல்லாக இல்லாத பட்சத்தில், நீங்கள், விரைவிலேயே ஸ்டார் அந்தஸ்தை எட்ட முடியும்!

அறிவுக் கண்ணைத் திறப்பதாவது! என்ன ஒரு அபத்தமான வேண்டுகோள்! அறிவு என்று ஒன்று இருந்தால் அதைத் தனியாகக் கழற்றி வைத்துவிட்டு, அப்புறமாகத் தான் பதிவு, பின்னூட்டம் எல்லாம் இட வேண்டும்!

இதெல்லாம் பண்ணினால், ஒரே நாளிலேயே உங்கள் பதிவு கூட, "பத்து லட்சம் ஹிட்சைத் தாண்டிய ஒரு தனிநபரின் வலைப்பதிவை மேய்ந்துகொண்டிருக்கிறீர்கள்!" என்ற அளவுக்கு என்ன, மீட்டரில் சூடு வைக்கத் தெரிந்தால், அதையுமே தாண்டி புனிதமான பதிவு ஆகிவிடலாம்!

வடிவேலு ரேஞ்சுக்குக் கேவலமாக உளறி அடிவாங்குவது தான் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம்!

jokes apart, வலைப்பதிவென்பது, நீங்கள் உங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு கருவி அவ்வளவுதான்! எவரையும் சார்ந்து இருக்க வேண்டியதுமில்லை, எவரையோ மனதில் வைத்து எழுதப்படுவதும் இல்லை! உங்களுக்காக, உங்கள் திருப்திக்காக எழுதுங்கள், பகிர்ந்துகொள்ளுங்கள்!