Monday, July 27, 2009

நாயாட நரியாட

உள்ளத்தில்.. நல்ல உள்ளம் உறங்காது....
சீர்காழியின் கம்பீரமான வாய்ஸ்
செவாலியரின் அட்டகாசமான நடிப்பு
NTRin இயல்பான நாடகம்....
கர்ணன்... காலத்தால் அழியாத காவியம்.....

சண்டே..
..ஏதோ சிந்தனையுடன்... மனைவி பேசுவதை கேட்டும் கேட்காமலும் அமர்ந்து இருந்த பொது...
திடீர் என்று... இந்த பாடல்....
கைகள் ரிமோட்டை தேடின..

Buttongal... படபடவென அடித்து கொண்டன....

நான் தேடும் காட்சியை என் கண்கள் கண்டது...
கலைஞர் தொலைகாட்சியில்...

அருமையான "கலா"ச்சாரம் சொல்லும் மானாட மயிலாட
நிகழ்ச்சியில்....

சாமியாராக.. கலா மாஸ்டர்
காமியாராக...நமீதா
மாமியாராக.. குஷ்பு

ரொம்ப சிரம பட்டு screenil நடித்து கொண்டு இருந்தனர்...

புஸ் புஸ் என்று கர்ணணாய் ஒருவன் மூச்சு விட்டு கொண்டு....
Stylisha ஒரு கண்ணன்..

கொடுமை தாங்கலை...

அவர்களை ரசிப்பது போல் மேல சொன்ன மூவரும்...
நல்ல வேளை... அந்த காட்சி சம்பந்தப்பட்ட அனைவரும்... இன்று உயிருடன் இல்லை...

பாட்டி வடை சுட்ட கதை கூட இனிமேல் இந்த மேடையில் அரங்கேறும் போல....

அப்போது நாயும் ஆடும் நரியும் ஆடும்...

நடுவர்கள்.. ரசிப்பது போல் நடிப்பார்கள்....
கொடுமைடா சாமி

நொந்து பொய்... சேனல் மாற்ற முற்பட்டேன்...
கடைசியாக விழுந்த வார்த்தைகள்...

மன்னவர் பணியேற்கும்(கலைஞர் டிவி வேலை) கண்ணனும் பனி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா மன்னித்து அருள்வாயடா ....

கர்ணன்.. மன்னிபாரா????

சுரேஷ்

1 comment:

Anonymous said...

சாமியாராக.. கலா மாஸ்டர்
காமியாராக...நமீதா
மாமியாராக.. குஷ்பு

indha kodumaiya nanum anubavichan!!
Niceeeee post !!