Friday, July 31, 2009

நான் காப்பியை நிறுத்திய கதை

என் நண்பன் ஒருவன் வீட்டில் கிரகப்ரவேசம்...
காலை எனக்கு சில வேலைகள் இருந்ததால்... மதியம் ஒரு 2 மணி அளவில்
அவன் வீட்டைத் தேடி கண்டு பிடித்து சென்றேன்...
அவன் வீடு....
நடுகாட்டில்.. நட்டநடுவில்...1 ground நிலம்....
அவன் வீட்டை கண்டுபிடிக்க கஷ்படவே இல்லை...ஏன் என்றால்..
அங்கு இருந்தது அவன் வீடு மட்டும் தன்...

நான் போய் சேர்ந்த பொது மணி 2:15.. எனக்கு பயங்கர பசி...
அடடா சுரேஷ்.. இப்ப வந்து இருக்கீங்க... சாப்பாடு எல்லாம் முடிந்து விட்டதே.... என்று
உண்மையான வருத்தத்துடன் சொன்னார் நண்பர்...
பரவா இல்லை சார், என்றேன்.. அடி வயறு எரிந்து கொண்டே...
சேரி.. காபியாவது குடிக்கறீங்களா - இது அவர்...
ஆஹா.. காபியாவது கிடைக்குதே என்ற எண்ணத்தில்.. சரி என்று தலையாட்ட எத்தனிதேன்..
கடவுளே... எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?
என் நண்பரின் 5 வயது மகன் அங்கே வந்து..
"அப்பா எந்த மடையனாவது 2 மணிக்கு காபி குடிப்பானான்னு" என்றான்

முடிந்தது..

நான் மடையன் இல்லை என்று நிரூபிக்க.... பசியோடு திரும்பினேன்.....
அன்று முதல் இன்று வரை... நான் 2 PM முதல் 5 PM வரை காபி குடிப்பது இல்லை....

Tuesday, July 28, 2009

அமானுஷ்யம்

அது ஒரு இருட்டு நேரம்....
நாத்திகம் பேசியே.. நாட்களை கழிக்கும் நான்...
நட்ட நிசியில்....
மை டியர் லிசா படத்தை சுடுகாட்டுக்கு அருகில் உள்ள செந்தில்வேல் theatreil பார்த்து விட்டு திரும்பி கொண்டு இருந்தேன்...

மொத்தம் 20 நிமிட இருட்டு பயணம் முடிந்தால் தான் மார்க்கெட் பகுதிக்கு செல்ல முடியும்..

நான் மட்டும் ரோட்டில்..எங்கும் நிசப்தம்....
பேய்களின் existanceai எங்கிருந்தோ சில நாய்கள் ஊளை இட்டு எனக்கு விளக்கின...
தூரத்து சுடுகாட்டுக்குள்.. ஒரு விளக்கு... அணைந்து அணைந்து வருவது போல்...தோற்றம்....
எங்கோ ஒலித்த கொலுசு சத்தம் என் காது அருகில்.....

பயம்.. என்னை ஆட்கொண்டது....
ஓட தொடங்கினேன்
நாயின் ஊளை சத்தம் தொடர்ந்து வந்தது....
என்ன செய்வது என்று தெரியாமல் ஓடினேன்...

தூரத்தில் ஒரு பஸ்
லைட் எல்லாம் ஆண் செய்யப்பட்டு நின்று கொண்டு இருந்தது....ஓடினேன் அதை நோக்கி....
கொலுசு சத்தம் என் அருகில் கேட்பது போல் ஒரு உணர்வு.. ஓட்டம் வேகம் எடுத்தது...
Busukkul போய்விட்டால்.. நாம் safe என்ற எண்ணத்தில்....வேகமாக ஓடினேன்...
இப்போது பஸ் அருகில்.. அபோது தான் கவனித்தேன்.. busukkul யாரும் இல்லை.. ஆனால்..
பஸ் ஓடி கொண்டு இருந்தது.... அதிர்ந்தேன்...
சுடுகாட்டின் அருகே.... தனியாக ஆள் இல்லாமல் ஒரு பஸ்....
On செய்யப்பட்ட நிலையில்...
உடம்பு சில்லிட்டது..
பரவாயில்லை...வெளிச்சம் இருக்கிறது ஏறிடுவோம் என்று எண்ணி.. busukkul ஏறி அமர்ந்தேன்...
லேசாக பஸ் ஆட தொடங்கியது... யாரோ என் பின்னால் வருவது போன்ற சத்தம்...

கண்ணை இருக்க மூடிக்கொண்டு.. தெரிந்த சாமி பேர் எல்லாம் சொல்ல தொடங்கினேன்...

படிஈர்....... என்று ஒரு அடி என் முதுகில்...

puncture ஆன பஸ்ஸை.. jackie போட்டு தூக்கி கொண்டு இருக்கிறோம்.. பெரிய lord லபக்கு போல.. ஏறி உள்ள உட்கார்ற??
கண்டக்டர் கண்கள் சிவக்க கேட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..............

தூரத்தில் நாய் இன்னும் ஏளனமாக ஊளை இட்டு கொண்டு இருந்தது.....

Monday, July 27, 2009

நாயாட நரியாட

உள்ளத்தில்.. நல்ல உள்ளம் உறங்காது....
சீர்காழியின் கம்பீரமான வாய்ஸ்
செவாலியரின் அட்டகாசமான நடிப்பு
NTRin இயல்பான நாடகம்....
கர்ணன்... காலத்தால் அழியாத காவியம்.....

சண்டே..
..ஏதோ சிந்தனையுடன்... மனைவி பேசுவதை கேட்டும் கேட்காமலும் அமர்ந்து இருந்த பொது...
திடீர் என்று... இந்த பாடல்....
கைகள் ரிமோட்டை தேடின..

Buttongal... படபடவென அடித்து கொண்டன....

நான் தேடும் காட்சியை என் கண்கள் கண்டது...
கலைஞர் தொலைகாட்சியில்...

அருமையான "கலா"ச்சாரம் சொல்லும் மானாட மயிலாட
நிகழ்ச்சியில்....

சாமியாராக.. கலா மாஸ்டர்
காமியாராக...நமீதா
மாமியாராக.. குஷ்பு

ரொம்ப சிரம பட்டு screenil நடித்து கொண்டு இருந்தனர்...

புஸ் புஸ் என்று கர்ணணாய் ஒருவன் மூச்சு விட்டு கொண்டு....
Stylisha ஒரு கண்ணன்..

கொடுமை தாங்கலை...

அவர்களை ரசிப்பது போல் மேல சொன்ன மூவரும்...
நல்ல வேளை... அந்த காட்சி சம்பந்தப்பட்ட அனைவரும்... இன்று உயிருடன் இல்லை...

பாட்டி வடை சுட்ட கதை கூட இனிமேல் இந்த மேடையில் அரங்கேறும் போல....

அப்போது நாயும் ஆடும் நரியும் ஆடும்...

நடுவர்கள்.. ரசிப்பது போல் நடிப்பார்கள்....
கொடுமைடா சாமி

நொந்து பொய்... சேனல் மாற்ற முற்பட்டேன்...
கடைசியாக விழுந்த வார்த்தைகள்...

மன்னவர் பணியேற்கும்(கலைஞர் டிவி வேலை) கண்ணனும் பனி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா மன்னித்து அருள்வாயடா ....

கர்ணன்.. மன்னிபாரா????

சுரேஷ்

Thursday, July 23, 2009

த்யானம் = சீனி மிட்டாய் - இனிப்பு

எனக்கு அப்போது வயது 15.

முதுகு வலிக்கு Coimbutore KG hospitalil treatment எடுத்துக்கொண்டு மீண்டும் நெல்லை வந்த நேரம்.யாரோ என் அம்மாவிடம் சொன்னார்களாம்

த்யானம் செய்தால் spinekku நல்லது என்று....

மறு நாள் நான் ஒரு மனவளகலை மன்றத்தில்...

என்னை போல் 20 பேர் த்யானம் பழக வந்துஇருந்தனர்...
தொடங்கியது பயிற்சி.....

இனி பயிற்சி அளித்தவர் பேசியது...

Step 1 :எல்லோரும் கண்களை மூக்கின் நுனியை பார்க்க செய்து, அப்படியே கண்ணை மூடவும்......
Step 2 : இப்போது உங்களுக்கு உங்கள் மூக்கின் நுனி தெரிகிறது.... (கண்ணை மூடின எப்படிங்க தெரியும்?, எனக்கு மட்டும் தெரியலை)
Step 3 : இப்போது மணி அடிப்போம்... அது உங்களுக்கு கேக்காது...(நீங்க பேசுவதே கேட்குது.. மணி சத்தம் எப்படி சார் கேட்காம இருக்கும்??)
Step 4 : வாய திறங்க.. ஒரு மிட்டாய் வைப்போம்.. அதன் ருசி உங்களுக்கு தெரியாது...(அட பாவி.. மிட்டாய் இனிக்காதா???)

இது தான் த்யானம்.. உங்கள் மனசை ஒரு விஷயத்தில் concentrate பண்ணி அதில் எண்ணத்தை செலுத்தினால்... உங்களுக்கு எதுவுமே தெரியாது..(ஆனால் பேசுவது கேட்கும் போல)

முடிந்தது பயிற்சி. இப்போது அவர் எங்களிடம் கேட்டார்... யாருக்கு நான் மணி அடித்தது கேட்டது ? நான் கை உயர்த்தினேன். இல்லை.. நான் மட்டுமே கை உயர்த்தினேன்...மிட்டாயும் இனித்தது சார் என்றேன் அப்பாவியாக....

உனக்கு concentrate பண்ண முடிய வில்லை....நீ சிறிது நாள் கழித்து வரவும்... மற்றவர்களுக்கு....இது தான் த்யானம்...நம் 5 sense organsiyum அடக்கி.... தொடர்ந்து பேசினர்....எனக்கு ஒன்னும் புரியவில்லை....

வீட்டிற்கு வந்தேன்.. அம்மா கேட்டாள் என்னடா நடந்தது என்று?
நாளை முதல் நீ வரவேண்டாம் என்று சொல்லி விட்டார் என்றேன்...
ஏன் என்றாள் அதிர்ச்சியுடன்...
எனக்கு மட்டும் தான் சீனி மிட்டாய் இனித்தது அதனால் என்று சொல்லியபடியே... உள்ளே சென்றேன்....
அம்மா எதுவும் புரியாமல் நின்றாள்......

இதே நிலைமை தான் பல இடங்களிலும்...Concentrate பண்ண முடியவில்லை என்று meditation classirkku போனால்... மூக்கில் Concentrate செய் என்கிறார்கள்... பலரும்.. செய்தேன் என்கிறார்கள்....இதை மாற்ற விஷயத்திலும் செய்தால்.. meditation தேவை இல்லாத ஒன்று ஆகிவிடுமே....

விடை தெரியாத கேள்வியுடன்.... நான்...

லோன் வேணுமா சார்??

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்...

பாடல் ஒலிக்கிறது. சட்டை பையிலிருந்து mobilei எடுத்து ஹலோ என்றேன்

Good morning சார். நாங்க XXXX bankil இருந்து பேசறோம். Personal loan ஏதாவது வேணுமா?? - இது அவள்
சொல்லுங்க. லோன் எடுக்கலாம்னு தான் இருக்கேன் - இது நான் (அப்ப எடுத்த லோஅனை எல்லாம் எப்படா புன்ணாக்கு அடைப்ப என்று மனைவி கேட்பது கேட்கிறது)
உங்க கம்பெனி பேர் என்ன சார் ? - இது அவள்
XXXTechnologies, வழக்கம் போல் அவள் தப்பாக நோட் செய்து கொள்ள... இல்லைமா "A for Apple B for Boy என்று பால பாடம் எடுத்தேன்
Take home sal net எவ்வளவு சார் ?
யாரிடமும் சொல்லாது உண்மையை அவளிடம் சொன்னேன். (HR rule is confidential)
Ok sir...information check பண்ணிட்டு 2 minutesla call பண்றேன்னு சொல்லிட்டு வைத்து விட்டாள்...
போகட்டும்......

2 நிமிடங்கள் கழித்து...

மீண்டும் கண்கள் இரண்டால்......

Sir... உங்க company Listed இல்லை ஆனாலும் நீங்க 50K மேல சம்பளம் வாங்குவதால் 24% வரை பண்ணலாம் - எனக்காக பரிந்து பேசுவது போல் பேசினாள்...
Intrest ரொம்ப அதிகம்மா, லோன் வேண்டம் என்றேன்..

இல்லை sir, உங்க கம்பெனி listed இல்லை.. மீண்டும் அதே பல்லவி...

ஒரு காலத்தில் listed(Black) இல்லை என்றால் சந்தோஷம்.. இப்போது அது பிரச்சனை...
Sorry ma.. உங்க criteriavirkaaga நான் எங்க கம்பெனி சேர்மன் கிட்ட போய் பேச முடியாது என்று சொல்லி கொண்டே...
சரி என் நண்பண் ஒருவன் "உண்மை" கம்பெனியில் வேலை செய்கிறான்... above 50K sal... அவனுக்கு எத்தனை % intrestla பண்ண முடியும் என்றேன்
உண்மை கம்பெனி என்றால் 18-20% sir என்றாள்....

அட பாவிங்களா.. ஒழுங்கா சம்பளம் கொடுக்கும் கம்பெனி listed இல்லை.... யார் acquire பண்ணுவாங்களோனு இருந்த கம்பனிக்கு கம்மி intrest....
தலையில் அடித்து கொண்டே போனை கட் செய்தேன்....
நானாக லோன் வேண்டும் என்று கேட்கவில்லை. அவர்களாக கூப்பிட்டு என் தகவல்களை பெற்று உனக்கு ௨0% லோன் வாங்க தகுதி இல்லை என்று சொல்வது -- ம்ம்ம் என்ன ஒரு வில்லத்தனம்

Note: இறுதிவ்ரை, அந்த பெண்ணிற்கு என் பேரும் எனக்கு அந்த பெண் பேரும் தெரியாது.... Unwanted details are not seeked - இது தான் டைம் managementO??

Wednesday, July 22, 2009

Ennai pol Silar

ஏனோ தெரியவில்லை...
என்னை போல் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்....

காலை விழித்து
காலேண்டர் கிழித்து
காபி போட்டு குடித்து -பின்னர்
காயிலா கடை கூட ஏற்க மறுக்கும்
என் ericsson காதலியை
Chargeril இணைத்தேன்...

என் காதலி...
பிலிப் உடைந்து போனாலும் என்
Lipudan ஒட்டி உறவாடும்
பழமையான பொக்கிஷம்.

நான் பேச நினைத்தாலும்...
மூட் இருந்தால் மட்டுமே
தான் பேசும் சரோஜா தேவி

அங்கு இங்கு என்று எல்லா இடமும் அலைந்து
சிக்னல் பிள்ளை பிடிக்கும்
சிங்கார பூச்சாண்டி

இப்போது,
என் routineukkaga
தன்னை தயார் படுத்தி கொள்ளும்
மின்சார குளியலில்

முன்னிரவு மோர் கரைக்க சொல்லி
பெருங்காயம் அதிகமாகி
பெரும் காயம் ஒன்றை
என் பெரும்தேவி இடம் சம்பாதித்ததால்...
சோகம் பெரும் சோகம்

யோசித்தேன்...
நல்ல பேர் எடுக்க நல்ல சந்தர்ப்பம்

என் காதலியை அந்த வெப்ப குளியலில் இருந்து வெளிஏற்றி
என் மனைவியின் Mobileinai
குளிக்க செய்தால்....
குதுகலம்....மோர் பிரச்சனை நோ மோர்...

அலுவலகம் கிளம்பும் அவசரத்தில்...
அறைக்குள் வந்தேன்
கண்டேன் அவள் mobileai
எடுத்தேன்
போட்டேன்.....

60 நிமிடங்கள்...

இதோ....
நான் அலுவலகத்தில்.....

வந்தவுடன் பார்க்கும் முதல் பணி அல்லவா அது.
சட்டையில் இருந்து என் காதலியை எடுத்தேன்...
என்ன ஆச்சரியம்...

என் காதலி ஆளே மாறி இருந்தாள்....

அறுவை சிகிச்சை நடக்க என் சட்டை என்ன
சூர்யா ஹோச்பிடல் ஆபரேஷன் தியேட்டரா ??

சிந்தித்த வேளையில்...
சிணுங்கிற்று கை பேசி

என் காதலி என்னை அழைகிறாள்!!!

எடுத்தேன்.....

"என் மொபிலெஐ ஏன் எடுத்து கொண்டு போனீர்கள். மொபைல் கூட ஒழுங்க கொண்டு போக தெரியாத...."

தொடர்ந்தது....
Mobile+மோர் பிரச்சனை....

அதிரிச்சியில் நான்
அர்ச்சனைகள் செய்வது அவள்
ஏனோ தெரியவில்லை...
என்னை போல் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்....

Carbonum Kandhanum

கற்று தேர்ந்த அறிவாளிகள் சிலர் கதை சொல்வர்
3 மதத்தை சேர்ந்தவர்கள் ஒரு படகில் பயணம் செய்து கொண்டு இருந்தாரம்.. திடீர் என்று படகு கவிழும் நிலை ஏற்பட்டதாம். முதல் நபர் அல்லாஹ்வை அழைதாரம்.. காப்பாற்ற பட்டாராம். இரண்டாமவர் கிருஸ்துவை அழைத்தாராம், காப்பாற்ற பட்டாராம். கடைசியாக இருந்த இந்து நண்பர் எந்த கடவுள் பேரை சொல்வது என்று யோசித்து கொண்டே கடலில் மூழ்கி போனாராம்.


சிலநாட்கள், என்னுள்ளே தோன்றிய ஒரு சிந்தனை ஒரு சிறு ஆராய்ச்சியை செய்ய தூண்டி, இன்று என் எண்ணங்களை உங்கள் முன் பார்வைக்கு வைக்கிறேன்.

ஏன் இத்தனை கடவுள்கள். ஏன் இதனை படைத்தனர் என்ற சிந்தனையால் சில கடவுள்கள் என் sample ஆனார்கள்.

  1. Murugan.
டிமிட்ரி மென்டெலீவ் என்பவர் 1869 ஆண்டில் Periodic table என்றொன்றை வடிவமைத்தார். உலகில் உள்ள தனிமங்களை(Elements) கண்ட அறிந்து அதனை adhan Atomic numberai கொண்டு வரிசை படுத்தினர். ஒவ்வொரு தனிமத்திற்கும் ஒரு தன்மை.அதற்கு என்று ஒரு இயல்பு, மற்ற ஒரு தனிமத்துடன் சேரும் valency ஆகியவை வரையருக்கப்பட்டது.

அதன்படி Carbon என்ற தனிமத்தின் சில பண்புகள் பின் வருமாறு.

1. Atomic Number is 6
2. Tetra valent and 4 electrons revolving around
3. Found most on rocky surface
4. Abundantly found in Mars
5. Normally red in color and hence Mars is called as Red planet.

அப்படிபட்ட தனிமத்தை தமிழ் கடவுள் முருகனுடன் ஒப்பிட்டு பார்த்ததே என் முதல் execerise.

விரிவாக வரும் நாட்களில்....

சுரேஷ்



எனது ஆசான்????

பதிவுகளை படிப்பதை மட்டுமே தொழிலா கொண்ட என்னை பதிவேற்றம் செய்யதூண்டிய அதனை பதிவுவுலக ஜாம்பவான்களுக்கும் என் நன்றி. நீங்கள் இருக்கும்தைரியத்தில் பதிவு எழுத தொடங்கி விட்டேன்.
எண்ணங்கள்பல நூறு இருந்தாலும் எழுதும் போது the framework of பிளாக்கர்என்பது தெரியாமல் தவிக்கிறேன். யாரவது ஹெல்ப் பண்ண முடியுமா???
என் கேள்விகள் கீழே

  1. நான் படித்த பெருவாரியான ப்ளொக்ஸ் திரு. சாரு அவர்களையும் திரு. ஜெயமோகன் அவர்களையும் சார்ந்ததாகவே உள்ளது. இலக்கியம் பற்றி பதிவுஏற்ற, இவ்விருவர்களில் ஒருவரின் சார்பு இருத்தல் வேண்டுமா???
  2. அந்தரங்க விஷயங்களை அப்பட்டமாக நான் சொன்னால் தன் என்னைஇலக்கிய வாதி என்று ஏற்று கொள்வார்களா ?
  3. பெரும்பாலும் Blog என்பது ஒருவரின் என்ன ஓட்டம் என்றால், ஒருவரின்எண்ணம் தவறு என்று வன்சொற்கள் சொல்வது அபத்தம் இல்லையா ?
  4. பின்னோட்டம் என்பது ஒரு ஓட்டம் எனில், எப்போது அது முடியும்?
  5. யாரையாவது குறிப்பிட்டு தாக்க வேண்டும் என்றால் pulambalonline.com, pulambal.in போன்று தனியாக சைட் ரேகிச்டேர் செய்து கொள்ள வேண்டுமா?

யாரவது என் அறிவு கண்ணை திறந்து வைத்தால் வாழ்நாள் முழுதும் அவர்கள்பதிவிற்கு பின்னோட்டம் இடுகிறேன்.

ஆவலுடன்
Suresh

அண்ணன் சொன்னால் தான் ஆமாம்

Nicolas Copernicus, உலகம் உருண்டை என்று சொன்னாராம். (14th Century)
ஒத்து கொண்டோம்.

பழத்திற்காக முருகன் உலகம் "சுற்றி" வந்தான் என்றார் நக்கீரர்.(8th Century)
பக்தி இது என்று சொல்லி சொல்லி சிரித்தோம்.

அண்ணன் சொன்னால் அது Science,
ஆன்மிகம் சொன்னால் அது பொய்ன்ஸ்

இது தான் பகுத்தறிவு.

புலம்பலின் புனர்ஜன்மம்

வலை பதிவில் என்னை பதிவூட்ட செய்த என் நண்பர்களுக்கு நன்றி.

எத்தனையோ முறை முயற்சி செய்தும் தொடங்கமலே முடிந்து போன என் பயணத்தை, மீண்டும் தொடங்கலாம் என்ற எண்ணத்தில் புலம்ப தொடங்குகிறேன்.

விதி வலியது.. என் கொடுமைகளையும்.. கொஞ்சம் அனுபவிங்கள்....

தயாராக...

சுரேஷ்