Tuesday, July 28, 2009

அமானுஷ்யம்

அது ஒரு இருட்டு நேரம்....
நாத்திகம் பேசியே.. நாட்களை கழிக்கும் நான்...
நட்ட நிசியில்....
மை டியர் லிசா படத்தை சுடுகாட்டுக்கு அருகில் உள்ள செந்தில்வேல் theatreil பார்த்து விட்டு திரும்பி கொண்டு இருந்தேன்...

மொத்தம் 20 நிமிட இருட்டு பயணம் முடிந்தால் தான் மார்க்கெட் பகுதிக்கு செல்ல முடியும்..

நான் மட்டும் ரோட்டில்..எங்கும் நிசப்தம்....
பேய்களின் existanceai எங்கிருந்தோ சில நாய்கள் ஊளை இட்டு எனக்கு விளக்கின...
தூரத்து சுடுகாட்டுக்குள்.. ஒரு விளக்கு... அணைந்து அணைந்து வருவது போல்...தோற்றம்....
எங்கோ ஒலித்த கொலுசு சத்தம் என் காது அருகில்.....

பயம்.. என்னை ஆட்கொண்டது....
ஓட தொடங்கினேன்
நாயின் ஊளை சத்தம் தொடர்ந்து வந்தது....
என்ன செய்வது என்று தெரியாமல் ஓடினேன்...

தூரத்தில் ஒரு பஸ்
லைட் எல்லாம் ஆண் செய்யப்பட்டு நின்று கொண்டு இருந்தது....ஓடினேன் அதை நோக்கி....
கொலுசு சத்தம் என் அருகில் கேட்பது போல் ஒரு உணர்வு.. ஓட்டம் வேகம் எடுத்தது...
Busukkul போய்விட்டால்.. நாம் safe என்ற எண்ணத்தில்....வேகமாக ஓடினேன்...
இப்போது பஸ் அருகில்.. அபோது தான் கவனித்தேன்.. busukkul யாரும் இல்லை.. ஆனால்..
பஸ் ஓடி கொண்டு இருந்தது.... அதிர்ந்தேன்...
சுடுகாட்டின் அருகே.... தனியாக ஆள் இல்லாமல் ஒரு பஸ்....
On செய்யப்பட்ட நிலையில்...
உடம்பு சில்லிட்டது..
பரவாயில்லை...வெளிச்சம் இருக்கிறது ஏறிடுவோம் என்று எண்ணி.. busukkul ஏறி அமர்ந்தேன்...
லேசாக பஸ் ஆட தொடங்கியது... யாரோ என் பின்னால் வருவது போன்ற சத்தம்...

கண்ணை இருக்க மூடிக்கொண்டு.. தெரிந்த சாமி பேர் எல்லாம் சொல்ல தொடங்கினேன்...

படிஈர்....... என்று ஒரு அடி என் முதுகில்...

puncture ஆன பஸ்ஸை.. jackie போட்டு தூக்கி கொண்டு இருக்கிறோம்.. பெரிய lord லபக்கு போல.. ஏறி உள்ள உட்கார்ற??
கண்டக்டர் கண்கள் சிவக்க கேட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..............

தூரத்தில் நாய் இன்னும் ஏளனமாக ஊளை இட்டு கொண்டு இருந்தது.....

5 comments:

Unknown said...

Romba nalla iruku narration....

ஐந்திணை said...

ha ha ha :)

vasu balaji said...

good

gilbert said...

கண்ணை கட்டி காட்டில் விட்டால் கடவுள் பெயர் தானால் வாயில் வரும்!

Very nice experience!

Unknown said...

marundawanukku irundathellam pei...