Thursday, August 6, 2009

ஒளவியம் பேசேல் - Don't carry tales



எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்....ஆனால்.. சில பதிவுகளால் ஏற்பட்ட சுய வற்புறுத்தல்களால் .. இதை எழுத நேருகிறது .... மற்றவர்கள் மன்னிக்கவும்


Ref : http://www.vinavu.com/2009/08/04/temple/

கடவுள் மறுப்பும் பார்பனீய எதிர்ப்பும் தான் தன்னை ப்ராஜெக்ட் செய்யும் என்று சில பதிவுலக மேதைகள் எண்ணி கொன்டுள்ளனர் போலும்....

சமுக நீதி என்பது அனைவரும் சமம் என்பதை உணர்த்துவதே அன்றி... ஒரு சமூகத்தினரை நாய் என்றும் நரி என்றும் அழைப்பதால் வருவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் பக்தி உணர்வை வரவேற்கும் சிலர்.. தன்னை கடவுள் மறுப்பு கொள்கையின் காவலனை எடுத்து காட்ட முயல்வது விந்தையிலும் விந்தை...

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி....
முற்போக்கு எழுத்து என்பது Uplifting a society என்பதை மீறி
Degrading a sect என்பதிலேயே இருக்கிறது....

நண்பர் விடுதலை அவர்களே....
உங்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் . ...ஏதோ ஒரு அளவிற்கு எனக்கும் பெரியாரை தெரியும்...

பூணூல் அணிந்த பிராமணனை... அவன் தன் உபாகர்மம்(Daily duties) செய்கிறாயா என்று கேட்டு, அவன் இல்லை என்று சொன்னால் தான், பூணலை அறுத்து எறிவாரம்....- இது உண்மை... 1970'sil NLC யில் vaelai பார்த்த யாரையும் நீங்கள் கேட்கலாம்...

பெரியார் என்பவர் ஒரு சித்தாந்தம் கொண்டு வந்தார்...பார்பனீயம் என்ற ஒரு கான்செப்டை ஒடுக்க சொன்னாரே அன்றி...
பிராமணர்களை ஒடுக்க சொல்லவில்லை... அப்படி சொல்லி இருந்தால்... ராஜாஜியுடன் அவர் இறுதி வரை நட்பாய் இருந்ததும், ராஜாஜியின் பூணல் அறுபடாமல் இருந்ததையும் நாம் காண முடிகிறது...

விடுதலை... என்பது... யாரிடம் இருந்து?
எதனிடம் இருந்து..?

சக மனிதனையே.. நாய் என்றும், நா கூசும் வார்த்தைகளால் திட்டும் நீங்கள்..
யார் விடுதலைக்காக பாடு படுகிறீர்கள்...

பிராமணன் rationalism பேச கூடாதா? பெரியாரை படிக்ககூடதா ?
Revelution என்பது ஒரு இயக்கத்தில் சேர்ந்து, ஒரு வர்கத்தை திட்டி வருவது அல்ல...
அவன் அவன் சமுகத்தில் நின்று கொண்டே, மாற்ற மனிதர்களையும் மதிப்பதில் தான் உண்டு...

பெரியாரிசம் is not hating anyone but its
Loving all...

மாறுங்கள்...மாற்றாதீர்கள்...
மறுமலர்ச்சி தானே வரும்....

PS: மேற்கூறிய பதிவுகளில்.. எங்குமே பார்பனர்களால் பிரச்சனை என்பது விளக்கப்படவில்லை... பின்னர் ஏன் தேவை இல்லாமல் பேசி இந்த பதிவை திசை திருப்ப முயல்கிறீர்கள் திரு விடுதலை அவர்களே?!!!!

கேள்விகளுடன்.. சுரேஷ்

3 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

/பெரியார் என்பவர் ஒரு சித்தாந்தம் கொண்டு வந்தார்...பார்பனீயம் என்ற ஒரு கான்செப்டை ஒடுக்க சொன்னாரே அன்றி.../

நீங்கள் புரிந்துகொண்டவிதம் சரியல்ல.அவர்கள் சொல்வது போல, பார்ப்பனீயம் என்ற ஒரு கான்செப்டே இருந்தது இல்லை. அந்தணன் எனப் அறவோன், மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் என்றும், பிரம்மத்தை அறிந்தவன் தான் பிராமணன் என்று தான் இருந்தது.

காரணமில்லாத வெறுப்பை உமிழ்பவர்களிடம் நியாயத்தையும், சமாதானத்தையும் எதிர்பார்க்க முடியாது.

Mukundan said...

பெரியாரை முழுவதும் உணர்ந்தவர்கள் வாய்மூடி மௌனிகளாகவோ, ஒட்டுத் திண்ணிகளாகவோ இருப்பதன் விளைவு இது.

பெரியாரின் சித்தாந்தம் என்பது சுயமரியாதை, சமூக நீதி மற்றும் பெண் விடுதலை ஆகியவற்றால் கட்டமைக்கப்பெற்றது. இவை மூன்றுக்கும் எதிராக பொதுவாக இருப்பது வர்ணாஸ்ரமும், கடவுள் (அ) மூட நம்பிக்கையுமும் என்று அவர் உணர்ந்திருந்தமையால் அவற்றை அவர் கடுமையாகச் சாடினார்.

உண்மையில் வர்ணாஸ்ரமத்தின் துணை கொண்டு அன்றைக்கு ஏற்ப்பட்ட தாக்குதல் உளவியல் ரீதியானது - இன்றைக்கு அது உடல் ரீதியாக மாறிவிட்டது.

தாக்குதல் தொடுப்பது யாராக இருப்பினும், அதைத் தடுப்பது நமது கடமை - சித்தாந்த எல்லைகளை மீறி.

ஜீவ கரிகாலன் said...

i support your thoughts. here people mis represent periarism.. good work