Thursday, July 23, 2009

த்யானம் = சீனி மிட்டாய் - இனிப்பு

எனக்கு அப்போது வயது 15.

முதுகு வலிக்கு Coimbutore KG hospitalil treatment எடுத்துக்கொண்டு மீண்டும் நெல்லை வந்த நேரம்.யாரோ என் அம்மாவிடம் சொன்னார்களாம்

த்யானம் செய்தால் spinekku நல்லது என்று....

மறு நாள் நான் ஒரு மனவளகலை மன்றத்தில்...

என்னை போல் 20 பேர் த்யானம் பழக வந்துஇருந்தனர்...
தொடங்கியது பயிற்சி.....

இனி பயிற்சி அளித்தவர் பேசியது...

Step 1 :எல்லோரும் கண்களை மூக்கின் நுனியை பார்க்க செய்து, அப்படியே கண்ணை மூடவும்......
Step 2 : இப்போது உங்களுக்கு உங்கள் மூக்கின் நுனி தெரிகிறது.... (கண்ணை மூடின எப்படிங்க தெரியும்?, எனக்கு மட்டும் தெரியலை)
Step 3 : இப்போது மணி அடிப்போம்... அது உங்களுக்கு கேக்காது...(நீங்க பேசுவதே கேட்குது.. மணி சத்தம் எப்படி சார் கேட்காம இருக்கும்??)
Step 4 : வாய திறங்க.. ஒரு மிட்டாய் வைப்போம்.. அதன் ருசி உங்களுக்கு தெரியாது...(அட பாவி.. மிட்டாய் இனிக்காதா???)

இது தான் த்யானம்.. உங்கள் மனசை ஒரு விஷயத்தில் concentrate பண்ணி அதில் எண்ணத்தை செலுத்தினால்... உங்களுக்கு எதுவுமே தெரியாது..(ஆனால் பேசுவது கேட்கும் போல)

முடிந்தது பயிற்சி. இப்போது அவர் எங்களிடம் கேட்டார்... யாருக்கு நான் மணி அடித்தது கேட்டது ? நான் கை உயர்த்தினேன். இல்லை.. நான் மட்டுமே கை உயர்த்தினேன்...மிட்டாயும் இனித்தது சார் என்றேன் அப்பாவியாக....

உனக்கு concentrate பண்ண முடிய வில்லை....நீ சிறிது நாள் கழித்து வரவும்... மற்றவர்களுக்கு....இது தான் த்யானம்...நம் 5 sense organsiyum அடக்கி.... தொடர்ந்து பேசினர்....எனக்கு ஒன்னும் புரியவில்லை....

வீட்டிற்கு வந்தேன்.. அம்மா கேட்டாள் என்னடா நடந்தது என்று?
நாளை முதல் நீ வரவேண்டாம் என்று சொல்லி விட்டார் என்றேன்...
ஏன் என்றாள் அதிர்ச்சியுடன்...
எனக்கு மட்டும் தான் சீனி மிட்டாய் இனித்தது அதனால் என்று சொல்லியபடியே... உள்ளே சென்றேன்....
அம்மா எதுவும் புரியாமல் நின்றாள்......

இதே நிலைமை தான் பல இடங்களிலும்...Concentrate பண்ண முடியவில்லை என்று meditation classirkku போனால்... மூக்கில் Concentrate செய் என்கிறார்கள்... பலரும்.. செய்தேன் என்கிறார்கள்....இதை மாற்ற விஷயத்திலும் செய்தால்.. meditation தேவை இல்லாத ஒன்று ஆகிவிடுமே....

விடை தெரியாத கேள்வியுடன்.... நான்...

5 comments:

PG said...

ரொம்ப நல்ல பதிவு. எனக்கும் இந்த விஷயம் ரொம்ப நாளாவே இருந்துது. அதுனாலயே இதெல்லாம் நம்பாம இருந்தேன்... இன்னிக்கு வரைக்கும் கூட.
உங்களுக்கு நெஜம்மாவே தியானத்துல interest இருக்குனா ஆழ்நிலை தியானம் செஞ்சு பாருங்க. (transcedental meditation - www.tm.org). மற்ற தியானம் மாதிரி... யோசி, மந்திரம் சொல்லு, மூக்க பாரு, நாக்க பாரு கதையெல்லாம் கிடையாது. complete scientific approach. நெஜம்மாவே concentration improvement இருக்கு.

Suresh V Raghav said...

@PG

Sure. I shall check and let you posted on my experience.

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க பாஸ்.நிறைய எழுதவும்.வாழ்த்துக்கள்.

Anonymous said...

Umaiyellam meditation panna sonna ipdi than..
cheeni mittaiyadhu kuchi mitaiyadhu - title semma sire!

யாசவி said...

may be teach by wrong persons

u have to improve ur approach