Tuesday, August 25, 2009

ரோபோ ஷூட்டிங் in சிறுசேரி

Sipcotukkul ஒரு சினிமா ஷூட்டிங்.










































































மூன்று நாட்களாக சிப்காட் நாவலூரில் ஒரே பரபரப்பு...
ரோபோட் ஷூட்டிங் நடை பெறுகிறது..
பீட்டர் ஹெஇன்ஸ், ஷங்கர் அனைவரும் இங்கே....

Parveen Travelsin ஒரு Busai.. Artificial Intelligence Research Society என்று பேர் மாற்றி.. உலவ விட்டு இருக்கிறார்கள்....

உங்கள் பார்வைக்கு சில படங்கள்..
மேலும் செய்திகள்



Black busukkul Rajini.. மேலே... 20 பேர்... பீட்டர் 1..2..3 சொன்னவுடன்.. மேலே குதித்து.. உள்ளே தாக்குகிறார்கள்....
உண்மையில்.. பிரம்மாண்டம் தான்


- தொடரும்

Thursday, August 20, 2009

ஆ....... - திகில் சிறு தொடர் [ என் முதல் முயற்சி ]

எங்கும் நிசப்தம்...
இருள் சூழ்ந்த அந்த இடத்தை, சொற்பமாக ஒளியூட்டி கொண்டு இருந்தது, அவளின் மொபைல் போன் மட்டுமே....
அவள்....
ஏதோ ஒரு அதிர்ச்சியில்.. இருப்பது போல்.... கால்களை சோபா மேல் மடித்து வைத்து கொண்டு...
கண்களில் ஒரு வித கலவரத்துடன்....
ஊரை விட்டு ஒதுங்கி இருந்த அந்த வீட்டினுள்.. ஏதோ நிகழ கூடாத ஒன்று நடந்து இருக்கிறது
அந்த நிகழ்வின் சாட்சிகளாக....
அவள் , அங்கு இருந்த நிசப்தம் மட்டுமே...
இப்பொழுது நான்....

அங்குலம் அங்குலமாக ஆழமாக பார்க்கிறேன்....
இருப்பது அவளின் கையில் உள்ள மொபைல் போன் மட்டுமே.....
அதன் ஒளியிலே... மெதுவாக நான் தேட தொடங்கினேன்...
அவள் அமர்ந்து இருந்த இடத்தில இருந்து சுமார் ஒரு 3 மீட்டர் தூரத்தில்... இன்னொரு ரூம் இருக்கிறது...

இருட்டில் துழாவி துழாவி சென்றேன்....
கீழே..ஏதோ பிசு பிசு என்று ஒட்டியது போன்ற ஒரு எண்ணம்...
குனிந்து பார்த்தால்... அது... அது... அது... சூடான ரத்தம்...


மெதுவாக குனிந்து பார்த்தால்... ரத்த ஆறு ஓடுவது நன்றாக தெரிகிறது....

மொபைல் போனின் வெளிச்சம்....இந்த அறைக்குள், இந்த எல்லையுடனே முடிந்து விட, என்னால் அந்த
ரத ஊற்றின் தொடக்கம் அறிய முடியவில்லை....
மெல்ல திரும்பினேன்....

அவள் இருந்த அறையில்......
எந்த ஒரு போராட்டம் நடந்து முடிந்த அறிகுறியும் இல்லாமல் அமைதியாகவே இருந்தது....
மெல்ல மெல்ல விஷயம் புரிய தொடங்கியது...

ஒரு கொலை நடந்து இருக்கிறது...
கொன்றவள் இவள்...
கொல்லப்பட்டவர்/வ்ள்????

...தொடரும்....

Monday, August 17, 2009

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி ....

ஏனோ எனக்கு கோவம்...
என் டீமில் உள்ள சிலர் நான் சொல்வதை
ஒழுங்காக செய்வதில்லை...
நான் ஒன்று சொல்ல , அவர்கள் ஒன்று செய்து, clientidam இருந்தும் என் DHidam இருந்தும் நல்ல rod....

நானும் தவறு செய்யாதே என்று சொல்லித்தான் பார்க்கிறேன்..
தொடர்ந்து தகவல்களை தவறாக புரிந்து கொண்டு... wrong output கொடுக்கிறார்கள்..

ச எது சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று விரக்தியுடன், வீட்டினுள் சென்றேன்...

அப்பா நான் cup ஐ உடைச்சுட்டேன் அப்பா...என்றான் shravan என்னிடம் வந்து...
ஏன் அப்பா உடைத்தாய் என்றேன், சற்றே எரிச்சலுடன்... இனிமேல் பார்த்து தூக்கணும் சரியா என்றேன்....

இங்கே வா அப்பா.... வா அப்பா என்று கையை பிடித்து கூடிக்கொண்டு போனான் அவன்...
உள்ளே கூட்டிகொண்டுபோனான்ன்...

இந்த கப்ப எப்படிப்பா பத்திரமா தூக்கணும்? ஒரு porcelein காபி mugai காட்டி கேட்டான் ....
உடனே...நான் அதன் handlai பிடித்து காட்டி...
இப்படி தூக்கினா உடையாது என்றேன்...
ஓகே அப்பா.. இனிமேல் இப்படியே தூக்கறேன்... உடைக்க மாட்டேன் என்று சொல்லிய படி சென்றான்....

ஏதோ ஒரு எண்ணம் என் மனதில்.....

Officeil நடந்த தவறுகளுக்கு, என் டீம் மேல தவறு இல்லை...
நான் அவர்களுக்கு புரியும் படி ஒரு முறை கூட சொல்லவில்லை என்று உரைத்தது....

மனதில் இருந்த கோவம் மறைந்தது....
மனம் வெளுத்தது...

தூரத்தில்.. shravan... என்னை பார்த்து நீ பாஸ் ஆயடுவ அப்பா என்று சொல்வது போல் ஒரு எண்ணம்....

சுவாமிமலை - தந்தைக்கு உபதேசம்

நேற்று இரவு
மணி 10:30 இருக்கும்...
என் 2 வயது மகன் என் மீது விளையாடி கொண்டு இருந்தான்..

அப்பா, இது என்னப்பா என்றான்...
ஜூஸ் கண்ணா - இது நான்
என்ன ஜூஸ் அப்பா ?? -அவன்
Grape ஜூஸ் கண்ணா - நான்
என்ன கிராப்ஸ் அப்பா?? --அவன்



ஏதோ ஒரு முடிவில்லா பாதையை நோக்கி நான் பயணிக்கிறேன் என்று புரிந்தது....
Black கிராப்ஸ் கண்ணா என்றேன்...
என்ன black அப்பா?

எனக்கு லேசாக கோவம் வந்தது..
பதில் சொல்லாமல் இருந்தேன்
சொல்லுப்பா என்ன black அப்பா??
பதில் தெரியாத காரணத்தால்...
Shravan கத்தி பேசாதே...நைட் ஆய்டுத்து....கத்தி பேசினால்
பக்கத்து வீட்டில் இருந்து கம்பு எடுத்து கொண்டு நம்மை அடிக்க வருவார்கள் என்றேன்....

பையன் மெதுவாக என் பக்கத்தில் வந்து... அதை கேட்டான்...
என்....அதனை கோவமும் தொலைந்து போனது...

என் போலவே ஒரு வீர திரு மகனை பெற்ற மகிழ்ச்சி....
ஒரு தன்மான தமிழனை பெற்ற உவகை...
சிரித்து கொண்டே...
அவனை அணைத்து கொண்டேன்...

அவன் கேட்டது......


"அப்பா ஓடி போய்டலாமா அப்பா...."

குழல் இனிது யாழ் இனிது என்பர் அவர் தம் மழலை சொல் கேளாதார்

Thursday, August 6, 2009

ஒளவியம் பேசேல் - Don't carry tales



எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்....ஆனால்.. சில பதிவுகளால் ஏற்பட்ட சுய வற்புறுத்தல்களால் .. இதை எழுத நேருகிறது .... மற்றவர்கள் மன்னிக்கவும்


Ref : http://www.vinavu.com/2009/08/04/temple/

கடவுள் மறுப்பும் பார்பனீய எதிர்ப்பும் தான் தன்னை ப்ராஜெக்ட் செய்யும் என்று சில பதிவுலக மேதைகள் எண்ணி கொன்டுள்ளனர் போலும்....

சமுக நீதி என்பது அனைவரும் சமம் என்பதை உணர்த்துவதே அன்றி... ஒரு சமூகத்தினரை நாய் என்றும் நரி என்றும் அழைப்பதால் வருவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் பக்தி உணர்வை வரவேற்கும் சிலர்.. தன்னை கடவுள் மறுப்பு கொள்கையின் காவலனை எடுத்து காட்ட முயல்வது விந்தையிலும் விந்தை...

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி....
முற்போக்கு எழுத்து என்பது Uplifting a society என்பதை மீறி
Degrading a sect என்பதிலேயே இருக்கிறது....

நண்பர் விடுதலை அவர்களே....
உங்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் . ...ஏதோ ஒரு அளவிற்கு எனக்கும் பெரியாரை தெரியும்...

பூணூல் அணிந்த பிராமணனை... அவன் தன் உபாகர்மம்(Daily duties) செய்கிறாயா என்று கேட்டு, அவன் இல்லை என்று சொன்னால் தான், பூணலை அறுத்து எறிவாரம்....- இது உண்மை... 1970'sil NLC யில் vaelai பார்த்த யாரையும் நீங்கள் கேட்கலாம்...

பெரியார் என்பவர் ஒரு சித்தாந்தம் கொண்டு வந்தார்...பார்பனீயம் என்ற ஒரு கான்செப்டை ஒடுக்க சொன்னாரே அன்றி...
பிராமணர்களை ஒடுக்க சொல்லவில்லை... அப்படி சொல்லி இருந்தால்... ராஜாஜியுடன் அவர் இறுதி வரை நட்பாய் இருந்ததும், ராஜாஜியின் பூணல் அறுபடாமல் இருந்ததையும் நாம் காண முடிகிறது...

விடுதலை... என்பது... யாரிடம் இருந்து?
எதனிடம் இருந்து..?

சக மனிதனையே.. நாய் என்றும், நா கூசும் வார்த்தைகளால் திட்டும் நீங்கள்..
யார் விடுதலைக்காக பாடு படுகிறீர்கள்...

பிராமணன் rationalism பேச கூடாதா? பெரியாரை படிக்ககூடதா ?
Revelution என்பது ஒரு இயக்கத்தில் சேர்ந்து, ஒரு வர்கத்தை திட்டி வருவது அல்ல...
அவன் அவன் சமுகத்தில் நின்று கொண்டே, மாற்ற மனிதர்களையும் மதிப்பதில் தான் உண்டு...

பெரியாரிசம் is not hating anyone but its
Loving all...

மாறுங்கள்...மாற்றாதீர்கள்...
மறுமலர்ச்சி தானே வரும்....

PS: மேற்கூறிய பதிவுகளில்.. எங்குமே பார்பனர்களால் பிரச்சனை என்பது விளக்கப்படவில்லை... பின்னர் ஏன் தேவை இல்லாமல் பேசி இந்த பதிவை திசை திருப்ப முயல்கிறீர்கள் திரு விடுதலை அவர்களே?!!!!

கேள்விகளுடன்.. சுரேஷ்