Monday, August 17, 2009

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி ....

ஏனோ எனக்கு கோவம்...
என் டீமில் உள்ள சிலர் நான் சொல்வதை
ஒழுங்காக செய்வதில்லை...
நான் ஒன்று சொல்ல , அவர்கள் ஒன்று செய்து, clientidam இருந்தும் என் DHidam இருந்தும் நல்ல rod....

நானும் தவறு செய்யாதே என்று சொல்லித்தான் பார்க்கிறேன்..
தொடர்ந்து தகவல்களை தவறாக புரிந்து கொண்டு... wrong output கொடுக்கிறார்கள்..

ச எது சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று விரக்தியுடன், வீட்டினுள் சென்றேன்...

அப்பா நான் cup ஐ உடைச்சுட்டேன் அப்பா...என்றான் shravan என்னிடம் வந்து...
ஏன் அப்பா உடைத்தாய் என்றேன், சற்றே எரிச்சலுடன்... இனிமேல் பார்த்து தூக்கணும் சரியா என்றேன்....

இங்கே வா அப்பா.... வா அப்பா என்று கையை பிடித்து கூடிக்கொண்டு போனான் அவன்...
உள்ளே கூட்டிகொண்டுபோனான்ன்...

இந்த கப்ப எப்படிப்பா பத்திரமா தூக்கணும்? ஒரு porcelein காபி mugai காட்டி கேட்டான் ....
உடனே...நான் அதன் handlai பிடித்து காட்டி...
இப்படி தூக்கினா உடையாது என்றேன்...
ஓகே அப்பா.. இனிமேல் இப்படியே தூக்கறேன்... உடைக்க மாட்டேன் என்று சொல்லிய படி சென்றான்....

ஏதோ ஒரு எண்ணம் என் மனதில்.....

Officeil நடந்த தவறுகளுக்கு, என் டீம் மேல தவறு இல்லை...
நான் அவர்களுக்கு புரியும் படி ஒரு முறை கூட சொல்லவில்லை என்று உரைத்தது....

மனதில் இருந்த கோவம் மறைந்தது....
மனம் வெளுத்தது...

தூரத்தில்.. shravan... என்னை பார்த்து நீ பாஸ் ஆயடுவ அப்பா என்று சொல்வது போல் ஒரு எண்ணம்....

2 comments:

Mukundan said...

//நான் அவர்களுக்கு புரியும் படி ஒரு முறை கூட சொல்லவில்லை என்று உரைத்தது....//

அப்படி வ்ரமல்லவா வாங்கிண்டு வந்திருக்கோம்...

gilbert said...

இது ஷ்ரவன் தந்தைக்கு ஆற்றும் உதவியாக கூட இருக்கலாம்!