Friday, January 20, 2012

பசியும் பக்கியும்

ஒரு scientist. பெயர் பசிகரன். ஒரு பொம்மை செய்கிறான். பெயர் பக்கி.
ஒரு நாள் பசிகரனுக்கு வடை சாப்பிட ஆசை வந்தது . ஆர்டர் செய்து சாப்பிட்டான்

பக்கி : எனக்கு வடை வேண்டும்.
பசி: முடியாது நீ machine. உன்னால் வடை சாப்பிட முடியாது..
பக்கி: இல்லை. கண்டிப்பாக எனக்கு வேண்டும்..
பசி: போடா த்ரோஹி..... என்று சொல்லி... பாக்கியை அடித்து விடுகிறான்
உடனே.. பக்கி தன்னை போல ஒரு 10 பக்கி செய்து.... காக்கை போல formation panni...வடையை தூக்கிகொண்டு சென்று விடுகிறது.


பசி, தன்னை போல் இன்னும் 10  பசிக்களை உருவாக்கி, நரி போல் formation செய்து, பக்கிசை ஏமாற்றி வடையை மீண்டும் பெற்று கொண்டார்.....

மிரண்டு போய்டேன் .... எத்தனை வருடங்களஅனாலும் பாட்டி வடை சுட்ட கதையின் மௌஸ் குறையாதுதான்

Friday, December 23, 2011

Wednesday, March 9, 2011

63

63 seat கொடுத்ததால் நாயன்மார் பற்றி எல்லாம் பேசுகிறார்..அப்போ திருமால்வளவன் தசாவதாரமா?கொமுக சப்த ரிஷியா? என்ன ஆச்சு இந்த கலைஞருக்கு... இத்தனை நாள் சினிமாவில் தான் வசனம் எழுதி நம்மை திரு திரு என்று முழிக்க வைத்தார் என்றால் இப்போ அறிக்கையிலுமா?

முடியலை....

கைக்கு இத்தனை சக்தி உண்டு என்பது இன்று தான் புரிந்தது...பக்தி மணம் கமழ அமைக்கப்பட்ட கூட்டணி என்பதால்.. இந்த வருட தேர்தல் அறிக்கைகளை... குமுதம் பக்தி, ஷக்தி விகடன் போன்ற புத்தகங்களில் காணலாம்.
நல்ல பேப்பரில் இதை வாங்க நினைத்தால்.. கிரி trading கம்பெனியை தொடர்பு கொள்ளவும்...

இனி கலைஞரை விஜய் டிவியில் கூட பார்க்கலாம். ஏன் எனில் சப்த ரிஷி மண்டலம் வழங்கும், சனி பரிஹார செயின் அதில் தான் விற்கபடுகிறது .

வாழ்க பக்தி....

Dummy Returns

மீண்டும் புலம்பலாம் என்று வந்துவிட்டேன். வேலை ஒன்றும் பெருசா இல்லை. நம்பி கொடுக்கவும் மாட்டேன் என்கிறாங்க. சர்வர் முன்னாடி இருந்து கொண்டு, சைட்(website than) எல்லாம் ஒழுங்கா வேலை பார்குதான்னு பார்க்கணுமாம்.
பார்த்துகொண்டே இருப்பதால், keyboard strokes மறந்து விடுமோ என்ற எண்ணத்தில்.. மீண்டும் typing பழக ..வந்துட்டேன்.. நாளுக்கு நாள் அரசியலிலும் என் அடி வயற்றிலும் சூடு அதிகமாகி கொண்டு இருபதால்... அது பற்றி புலம்பலாம் என்று எண்ணி வருகின்றேன்....

பின்னூட்டம் mandate இல்லை... பின் ஓட்டம் தவிர்த்தால் தன்யன் ஆவேன்....

Ready Jute......

Tuesday, August 25, 2009

ரோபோ ஷூட்டிங் in சிறுசேரி

Sipcotukkul ஒரு சினிமா ஷூட்டிங்.










































































மூன்று நாட்களாக சிப்காட் நாவலூரில் ஒரே பரபரப்பு...
ரோபோட் ஷூட்டிங் நடை பெறுகிறது..
பீட்டர் ஹெஇன்ஸ், ஷங்கர் அனைவரும் இங்கே....

Parveen Travelsin ஒரு Busai.. Artificial Intelligence Research Society என்று பேர் மாற்றி.. உலவ விட்டு இருக்கிறார்கள்....

உங்கள் பார்வைக்கு சில படங்கள்..
மேலும் செய்திகள்



Black busukkul Rajini.. மேலே... 20 பேர்... பீட்டர் 1..2..3 சொன்னவுடன்.. மேலே குதித்து.. உள்ளே தாக்குகிறார்கள்....
உண்மையில்.. பிரம்மாண்டம் தான்


- தொடரும்

Thursday, August 20, 2009

ஆ....... - திகில் சிறு தொடர் [ என் முதல் முயற்சி ]

எங்கும் நிசப்தம்...
இருள் சூழ்ந்த அந்த இடத்தை, சொற்பமாக ஒளியூட்டி கொண்டு இருந்தது, அவளின் மொபைல் போன் மட்டுமே....
அவள்....
ஏதோ ஒரு அதிர்ச்சியில்.. இருப்பது போல்.... கால்களை சோபா மேல் மடித்து வைத்து கொண்டு...
கண்களில் ஒரு வித கலவரத்துடன்....
ஊரை விட்டு ஒதுங்கி இருந்த அந்த வீட்டினுள்.. ஏதோ நிகழ கூடாத ஒன்று நடந்து இருக்கிறது
அந்த நிகழ்வின் சாட்சிகளாக....
அவள் , அங்கு இருந்த நிசப்தம் மட்டுமே...
இப்பொழுது நான்....

அங்குலம் அங்குலமாக ஆழமாக பார்க்கிறேன்....
இருப்பது அவளின் கையில் உள்ள மொபைல் போன் மட்டுமே.....
அதன் ஒளியிலே... மெதுவாக நான் தேட தொடங்கினேன்...
அவள் அமர்ந்து இருந்த இடத்தில இருந்து சுமார் ஒரு 3 மீட்டர் தூரத்தில்... இன்னொரு ரூம் இருக்கிறது...

இருட்டில் துழாவி துழாவி சென்றேன்....
கீழே..ஏதோ பிசு பிசு என்று ஒட்டியது போன்ற ஒரு எண்ணம்...
குனிந்து பார்த்தால்... அது... அது... அது... சூடான ரத்தம்...


மெதுவாக குனிந்து பார்த்தால்... ரத்த ஆறு ஓடுவது நன்றாக தெரிகிறது....

மொபைல் போனின் வெளிச்சம்....இந்த அறைக்குள், இந்த எல்லையுடனே முடிந்து விட, என்னால் அந்த
ரத ஊற்றின் தொடக்கம் அறிய முடியவில்லை....
மெல்ல திரும்பினேன்....

அவள் இருந்த அறையில்......
எந்த ஒரு போராட்டம் நடந்து முடிந்த அறிகுறியும் இல்லாமல் அமைதியாகவே இருந்தது....
மெல்ல மெல்ல விஷயம் புரிய தொடங்கியது...

ஒரு கொலை நடந்து இருக்கிறது...
கொன்றவள் இவள்...
கொல்லப்பட்டவர்/வ்ள்????

...தொடரும்....

Monday, August 17, 2009

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி ....

ஏனோ எனக்கு கோவம்...
என் டீமில் உள்ள சிலர் நான் சொல்வதை
ஒழுங்காக செய்வதில்லை...
நான் ஒன்று சொல்ல , அவர்கள் ஒன்று செய்து, clientidam இருந்தும் என் DHidam இருந்தும் நல்ல rod....

நானும் தவறு செய்யாதே என்று சொல்லித்தான் பார்க்கிறேன்..
தொடர்ந்து தகவல்களை தவறாக புரிந்து கொண்டு... wrong output கொடுக்கிறார்கள்..

ச எது சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று விரக்தியுடன், வீட்டினுள் சென்றேன்...

அப்பா நான் cup ஐ உடைச்சுட்டேன் அப்பா...என்றான் shravan என்னிடம் வந்து...
ஏன் அப்பா உடைத்தாய் என்றேன், சற்றே எரிச்சலுடன்... இனிமேல் பார்த்து தூக்கணும் சரியா என்றேன்....

இங்கே வா அப்பா.... வா அப்பா என்று கையை பிடித்து கூடிக்கொண்டு போனான் அவன்...
உள்ளே கூட்டிகொண்டுபோனான்ன்...

இந்த கப்ப எப்படிப்பா பத்திரமா தூக்கணும்? ஒரு porcelein காபி mugai காட்டி கேட்டான் ....
உடனே...நான் அதன் handlai பிடித்து காட்டி...
இப்படி தூக்கினா உடையாது என்றேன்...
ஓகே அப்பா.. இனிமேல் இப்படியே தூக்கறேன்... உடைக்க மாட்டேன் என்று சொல்லிய படி சென்றான்....

ஏதோ ஒரு எண்ணம் என் மனதில்.....

Officeil நடந்த தவறுகளுக்கு, என் டீம் மேல தவறு இல்லை...
நான் அவர்களுக்கு புரியும் படி ஒரு முறை கூட சொல்லவில்லை என்று உரைத்தது....

மனதில் இருந்த கோவம் மறைந்தது....
மனம் வெளுத்தது...

தூரத்தில்.. shravan... என்னை பார்த்து நீ பாஸ் ஆயடுவ அப்பா என்று சொல்வது போல் ஒரு எண்ணம்....